மகா ஆயுஷ்ய ஹோமம் (ஒரு குடும்பத்திற்கு மட்டும் செய்யப்படும் பிரத்யேக யாகம்)
உங்கள் குடும்பத்தினரின் பிறந்தநாள்,திருமண நாள், பெரியவர்களின் 60,70,80வது பிறந்தநாட்களுக்கு தரும் சிறந்த ஆன்மீக பரிசு
This puja includes up to 10 family members at no extra cost.
பூஜை பற்றி
பூஜையின் பயன்கள்
ஆயுள் விருத்தி
ஜாதகத்தில் உள்ள ஆயுள் தோஷங்கள், கண்டங்கள் மற்றும் ஆயுள் பலவீனங்கள் நீங்கி ஆயுள் கூடும்.
நோய் நிவாரணம்
தீராத நாள்பட்ட நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் மருத்துவச் செலவுகள் அகலும்.
குழந்தைகள் நலம்
குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷங்கள் நீங்கி, நல்ல வளர்ச்சி, நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
உடல் பலம் & புத்துணர்ச்சி
சரீர பலவீனம் நீங்கி, உடலில் புதிய ஆற்றலும், சுறுசுறுப்பும் உண்டாகும்.
பூஜை செயல்முறை
அனுக்ஞை & விக்னேஸ்வர பூஜை
ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.
புண்யாகவாசனம்
ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் கலச தீர்த்தத்தால் புனிதப்படுத்துதல்.
மகா ஆயுஷ்ய சங்கல்பம்
உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் தோஷங்கள் நீங்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்
கலச ஆவாஹனம் & ஆயுர் தேவதா ஜபம்
புனித கலசத்தில் ஆயுர் தேவதை, தன்வந்திரி பகவான் மற்றும் மிருத்யுஞ்ஜய ஈஸ்வரனை ஆவாஹனம் செய்து மந்திரங்கள் ஜபித்தல்.
மகா ஆயுஷ்ய ஹோமம்
ஹோம அக்னியில் மூலிகைப் பொருட்கள், பசு நெய் மற்றும் ஆகுதிகள் சமர்ப்பித்து 'ஆயுஷ்ய சூக்த' ஹோமம் இயற்றுதல்.
பூர்ணாஹுதி & மகா தீபாராதனை
ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, பூர்ணாஹுதி முடித்து, மகா தீபாராதனை காட்டி ரக்ஷை வழங்குதல்.
கோவில் விவரங்கள்
ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில், அருகன்குளம்
பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை
இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி இந்த பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Puja Gallery





