
மகா ஆயுஷ்ய ஹோமம் (ஒரு குடும்பத்திற்கு மட்டும் செய்யப்படும் பிரத்யேக யாகம் ,உங்களின் விருப்பத்திற்கேற்ற தேதிகளில் ஹோமம் செய்து தரப்படும்)
ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில், அருகன்குளம்
கார்த்திகை மகா தீப சிறப்பு வழிபாடு
29.44L+pujas conducted
You won't be charged yet
பிறவிப் பிணிகள், தீராத நோய்கள், தலைக்கு மேல் நிற்கும் கடன் சுமைகள், கர்ம வினைகளின் பிடி மற்றும் அகத்தில் அகலாத அஞ்ஞான இருளால் உங்கள் வாழ்க்கை வெளிச்சமின்றித் தவிக்கிறதா?... உங்க அனைத்துக் கஷ்டங்களுக்கும், துன்பச் சுமைகளுக்கும் ஒரே தீர்வாக, உங்கள் வாழ்வை பிரகாசிக்கச் செய்ய உதவும் இந்த 'மகா தீப சிவ ருத்ர ஹோமம்'!
நினைத்தாலே முக்தி தரும் அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் உள்ள வைதீக தனியார் யாகசாலையில் கார்த்திகை மாதம் 08-ஆம் நாள் நவம்பர் 24-ம் தேதி இப்புனித மகா யாகம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. தீபப் பெருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான கார்த்திகை பௌர்ணமி மற்றும் மகா தீபப் புண்ணிய தினம் ஒன்றிணையும் இந்த அபூர்வ நாளில் நிகழும் வழிபாட்டைக் காண்பதும் பங்கேற்பதும் கோடி பிறவிப் புண்ணியத்தைத் தரும்.
மகா தீப சிவ ருத்ர ஹோமம் என்பது சிவபெருமானின் அக்னி ஜோதி சொரூபத்தையும், கருணா மூர்த்தியான அருணாசலேஸ்வர அம்சத்தையும் ஆவாஹனம் செய்து நடத்தப்படும் முதன்மை யாகமாகும்.
ஹோம விசேஷம்: சக்திவாய்ந்த 'ஸ்ரீ ருத்ரம்', 'சமகம்', 'புருஷ சூக்தம்', 'சிவபுராணம்' மற்றும் 'பஞ்சாட்சர ஜபம்' முழங்க ஹோமம் இயற்றப்படுகிறது.
அக்னி தீட்சை: வில்வ தளங்கள், நவதானியங்கள், விசேஷ மூலிகைகள், தூய பசு நெய், சமித்துக்கள் மற்றும் கனிகள் ஆகுதி சமர்ப்பிக்கப்படும்போது, பக்தர்களைச் சூழ்ந்துள்ள சகல தோஷங்களும், கர்ம வினைகளும் ஹோம அக்னியில் பஸ்மமாகின்றன.
சிவபுராணத்தின் படி, பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே "யார் உயர்ந்தவர்?" என்ற அகந்தை மேலோங்கிய போது, அவர்களின் அஞ்ஞானத்தைப் போக்கச் சிவபெருமான் கார்த்திகை பௌர்ணமி திருநாளில் அடி முடி காண முடியாத அக்னிப் பிழம்பாக (லிங்கோத்பவ மூர்த்தியாக) தோன்றினார். விஷ்ணு வராகமாகவும், பிரம்மன் அன்னப் பறவையாகவும் தேடியும் இறைவனின் எல்லையைக் காண முடியாமல் தங்கள் கர்வத்தை இழந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஈசன் அந்த பேரொளிப் பிழம்பை சாந்தமான மலையாக மாற்றி, ஜோதி வடிவில் காட்சி தந்தருளினார்.
கார்த்திகை பௌர்ணமி மகா தீப நன்னாளில், ஜோதி ஸ்தலமான திருவண்ணாமலையில் இயற்றப்படும் இந்த 'சிவ ருத்ர ஹோமம்', நமக்குள் இருக்கும் அறியாமை மற்றும் பிறவிப் பிணிகளைச் சுட்டெரித்து, இல்லங்களில் ஜோதி போன்ற மங்களகரமான ஒளியையும், குடும்பத்தில் சகல காரிய சித்திகளையும் தந்தருளும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாகும்.
முன்ஜென்ம பாவங்கள், ஜென்ம அந்தரங்களில் செய்த தவறுகளால் ஏற்படும் கர்ம வினைகள் மற்றும் பித்ரு தோஷங்கள் முற்றிலும் சுட்டெரிக்கப்படும்.
நாட்பட்ட வியாதிகள், அறுவை சிகிச்சை பயங்கள் மற்றும் கண்டங்கள் நீங்கி நீண்ட ஆயுளும், பூரண ஆரோக்கியமும் சித்திக்கும்.
வறுமை நீங்கி, குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும், புகழும், நிம்மதியும் நிலைத்து நிற்கும்.
செவ்வாய்க்கிழமையில் பௌர்ணமி இணையும் நாளில் நடைபெறுவதால், ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் மற்றும் ராகு-கேது தோஷங்கள் தணியும்.
சிவபெருமானின் பூரண அருளால் வாழ்வின் சகல நன்மைகளும் கைகூடும்.
ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.
ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.
உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் மனக் கவலைகள், நோய்கள், தோஷங்கள் நீங்கி சுபிட்சமும் ஆரோக்கியமும் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.
புனித கலசத்தில் ஸ்ரீ அருணாசலேஸ்வர பெருமானை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த ருத்ர மந்திரங்கள் ஜபித்தல்.
ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க வில்வ தளங்கள், நவதானியங்கள், விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.
ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, அக்னி சொரூபனான ஈசனுக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.
பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.
எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.
வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.