பிரபோதினி ஏகாதசி + வெள்ளி சிறப்பு வாராஹி ஹோமம்

ஸ்ரீ மகா வாராஹி ஹோமம்

  • தொழில் & பணி முன்னேற்றம்
  • வலிமை & தைரியம்
  • நல்ல ஆரோக்கியம்
வைதீக தனியார் யாகசாலை, தமிழ்நாடு
நவம்பர் 20, வெள்ளி | Auspicious Muhurat
00days:00hrs:00mins:00secs
Muhurat ends in

32.46L+pujas conducted

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக தனியார் ஆலயங்கள்/ யாகசாலைகளில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

Participate Now

You won't be charged yet

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக தனியார் ஆலயங்கள்/ யாகசாலைகளில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

எதிரிகளின் தொல்லை, கண் திருஷ்டி, பொறாமை, தீராத கடன், வழக்குகள், எடுத்த காரியங்களில் தொடர் தடை பூர்விக சொத்து பிரச்சனை, வீடு, மனை யோகம் தள்ளிப்போகிறது என மனம் அமைதியின்றித் தவிக்கிறீர்களா?... இவற்றிலிருந்து விடுபட்டு, வெற்றி, செல்வ வளம் பெற நடத்தப்படும் பரிகார யாகமே ஸ்ரீ மகா வாராஹி ஹோமம்.

பராசக்தியின் படைத்தளபதியாகவும், மகாவிஷ்ணுவின் வராஹ அம்சமாகவும் போற்றப்படும் ஸ்ரீ மகா வாராஹி தேவியை ஆவாஹனம் செய்து, வேத மந்திரங்கள் முழங்க இந்த ஹோமம் நடைபெறுகிறது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்து, பயத்தை நீக்கி, எதிர்ப்புகளை முறியடித்து, வாழ்வில் வெற்றியை அருள்பவள் வாராஹி அன்னை.

நிகழும் பராபவ ஆண்டு கார்த்திகை 5ஆம் நாள் நவம்பர் 20 வெள்ளிக்கிழமை வைதீக தனியார் யாகசாலையில் இந்த மகா யாகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அம்பிகைக்குரிய வெள்ளிக்கிழமை. அதனுடன் மகாவிஷ்ணு யோக நித்திரையிலிருந்து எழும் பிரபோதினி ஏகாதசியும் (தேவ உத்தான ஏகாதசி) இணைந்து வருகிறது. இந்த அரிய நாளில் செய்யும் வழிபாடு பன்மடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ மகா வாராஹி ஹோம மகிமை 

ஸ்ரீ மகா வாராஹி ஹோமம் என்பது ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் முதன்மைச் சேனாதிபதியான வாராஹி அம்மனின் அருளையும், பாதுகாப்புச் சக்தியையும் வேண்டி நடத்தப்படும் விசேஷ யாகமாகும்.

  • ஹோம விசேஷம்: சக்திவாய்ந்த 'வாராஹி மூல மந்திரங்கள்', 'வாராஹி காயத்ரி', 'வாராஹி அஷ்டோத்திரம்' மற்றும் 'வாராஹி கவசம்' முழங்க அன்னையின் அருள் அக்னியில் ஆவாஹனம் செய்யப்படுகிறது.

  • அக்னி & திரவிய மகிமை: மாதுளம் பழங்கள், சிவப்பு மலர்கள், கிழங்கு வகைகள், விசேஷ மூலிகைகள், நெய் மற்றும் சமித்துக்கள் ஹோம அக்னியில் சமர்ப்பிக்கப்படும்போது, பக்தர்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களும், தடைகளும் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும் என்பது ஐதீகம்.

புராணப் பின்னணியும் ஆன்மீக முக்கியத்துவமும்

'லலிதா மகாத்மியம்' கதையின் படி, அசுர சக்திகளை வதம் செய்து தேவர்களைக் காக்க அன்னை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அவதரித்தபோது, அவளது சேனைகளுக்கு முதன்மைச் சேனாதிபதியாக (தண்டநாதாவாக) ஸ்ரீ மகா வாராஹி தேவி பொறுப்பேற்றாள்.

ஏனக் (வராஹ) முகமும், கரங்களில் கலப்பையும் உலக்கையும் ஏந்திய வாராஹி தேவி, 'கிரிச்சக்ர ரதத்தில்' அமர்ந்து தேவர்களுக்கு வெற்றி வாகை சூடித் தந்ததால் 'காரிய சித்தி நாயகி' எனப் போற்றப்படுகிறாள்.

மகாவிஷ்ணுவின் அருளும் சக்தி அம்சமும் நிறைந்த பிரபோதினி ஏகாதசி நன்னாளில், ஸ்ரீ மகா வாராஹி தேவியை ஆவாஹனம் செய்து 'ஸ்ரீ மகா வாராஹி ஹோமம்' இயற்றுவது, அடியார்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளை அகற்றி நல்வழி காட்டும் உயர்ந்த வழிபாடாகும்.

Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

1

எதிர்ப்புகள் & வழக்குச் சிக்கல்கள்

மறைமுக மற்றும் வெளிப்படையான எதிர்ப்புகள், தொழில் போட்டி மற்றும் நீண்ட நாள் நீதிமன்ற வழக்குகளில் சுமுகமான சூழல் உருவாக அம்மனின் அருள் கிடைக்கும்.

2

எதிர்மறை ஆற்றல் நிவர்த்தி

திருஷ்டி, பய உணர்வுகள் மற்றும் எதிர்மறை அதிர்வுகளின் தாக்கம் விலகி மன அமைதியும் குடும்பத்தில் பாதுகாப்பும் நிலவ வழிவகுக்கும்.

3

கடன் சுமை குறைய & வளம் பெருக

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கதவுகள் திறக்கவும், தன-தானிய லட்சுமி கடாட்சம் பெருகவும், கடன் சுமைகளில் இருந்து மீளவும் இறை நம்பிக்கை வழிவகுக்கும்.

4

காரிய சித்தி & பாதுகாப்பு

தொடங்கும் நற்செயல்கள் தடைகளின்றி நிறைவேறவும், வாழ்நாளில் மேன்மையும் பாதுகாப்பும் நிலைத்திருக்கவும் அம்பிகையின் பூரண அருள் துணைநிற்கும்.

பூஜை செயல்முறை

1

அனுக்ஞை & மகா கணபதி பூஜை

ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.

2

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.

3

ஸ்ரீ மகா வாராஹி சங்கல்பம்

உங்களின் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்கள் வாழ்வின் தடைகள் நீங்கி நலம் பெற அர்ச்சகர் சங்கல்பம் செய்தல்.

4

கும்ப ஆவாஹனம் & வாராஹி ஜபம்

புனித கலசத்தில் ஸ்ரீ மகா வாராஹி தேவியை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த மூல மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் ஜபித்தல்.

5

ஸ்ரீ மகா வாராஹி ஹோமம்

ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க மலர்கள், விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

6
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து பூர்ணாஹுதி செய்து, மகா வாராஹி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, ஆகம விதிகளின்படி இந்த பரிகார பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவில் விவரங்கள்

வைதீக தனியார் யாகசாலை

தமிழ்நாடு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Family Puja

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

ச
சத்யபாமா
மதுரை
Verified
Couple Puja

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

ப
பத்மா
தஞ்சாவூர்
Verified
Private Puja

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

க
கிருஷ்ணா
பெங்களூரு
Verified

Reviews

4.95.9L+
ச

சத்யபாமா

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

5.0
ப

பத்மா

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

5.0
க

கிருஷ்ணா

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

5.0
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
ஸ்ரீ மகா வாராஹி ஹோமம்
ISO Certified 27001100% Secure PaymentCustomer Support
பூஜை நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் பூஜை வீடியோ உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும்.

You won't be charged yet

ISO Certified 27001100% Secure PaymentCustomer Support