பயம் நீங்கி, தடைகள் அகன்று, பைரவர் அருள் காக்கட்டும்

மகா கால பைரவர் ஹோமம் (கால பைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு)

  • நல்ல ஆரோக்கியம்
  • செல்வம் & செழிப்பு
  • தொழில் வளர்ச்சி & முன்னேற்றம்
வைதீக தனியார் யாகசாலை, திருவண்ணாமலை
டிசம்பர் 1, செவ்வாய் | kala bairava jeyanthi
00days:00hrs:00mins:00secs
Muhurat ends in

10K+pujas conducted

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக தனியார் ஆலயங்கள்/ யாகசாலைகளில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

Participate Now

You won't be charged yet

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக தனியார் ஆலயங்கள்/ யாகசாலைகளில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

வாழ்வில் தொடரும் தடைகள், எதிர்காலம் குறித்த பயம், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை எண்ணங்களால் மன நிம்மதியின்றித் தவிக்கிறீர்களா?.. பொருளாதாரச் சவால்கள், தொழில் முடக்கம் மற்றும் கிரக தோஷங்களால் வாழ்வில் தேக்க நிலை ஏற்படுகிறதா?..

இந்த எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தடைகள் விலகி, உங்களுக்கு அசைக்க முடியாத மன தைரியத்தையும், ஆன்மீகப் பாதுகாப்பையும், சுபிட்சத்தையும் அருள வேண்டி நடத்தப்படும் சிறப்பு வழிபாடே 'மகா கால பைரவர் பரிகார ஹோமம்' ஆகும்.

நிகழும் பராபவ ஆண்டு கார்த்திகை மாதம் 16-ஆம் நாள் டிசம்பர் 01 செவ்வாய்க்கிழமை, சிவபெருமானின் உக்கிர காவல் அம்சமான ஸ்ரீ கால பைரவர் அவதரித்த புண்ணிய தினமான கால பைரவர் ஜெயந்தி (காலாஷ்டமி) மற்றும் செவ்வாய்க்கிழமை கூடிவரும் நன்னாளில், திருவண்ணாமலையில் அமைந்துள்ள வைதீக யாகசாலையில் இந்த மகா ஹோம வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

காலத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் அதிபதியான ஸ்ரீ மகா கால பைரவரை ஆவாஹனம் செய்து, வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் இயற்றுவது, நம் மனதில் உள்ள பயம், தயக்கம், சனி மற்றும் ராகு-கேது தோஷத் தாக்கங்கள் நீங்கி, வாழ்வில் வெற்றியும் சுபிட்சமும் பெருக இறையருளை பெற்று தரும் ஆன்மீக வழிபாடாகும்.

மகா கால பைரவர் ஹோம மகிமை

மகா கால பைரவர் ஹோமம் என்பது காலத்தை நிர்வகிக்கும் பரம்பொருளான ஸ்ரீமகா கால பைரவரின் நல்லருளையும், ஆன்மீகப் பாதுகாப்பையும் வேண்டி நடத்தப்படும் பாரம்பரிய பரிகார யாகமாகும்.

  • ஹோம விசேஷம்: புனிதமான 'கால பைரவர் மூல மந்திரங்கள்', 'கால பைரவாஷ்டகம்', 'ஸ்ரீ ருத்ரம்' மற்றும் 'பைரவ கவசம்' முழங்க பெருமானின் திருவருள் அக்னியில் ஆவாஹனம் செய்யப்படுகிறது.

  • அக்னி & தானிய மகிமை: கருப்பு எள், மிளகு, விசேஷ மூலிகைகள், செவ்வரளி மலர்கள், வில்வ தளங்கள் மற்றும் தூய பசு நெய் ஹோம அக்னியில் சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களின் நலனுக்காகவும் தோஷ சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

புராண பின்னணி

புராணங்களின் படி, படைப்புக் கடவுளான பிரம்மதேவருக்குத் தானே உயர்ந்தவர் என்ற ஆணவம் ஏற்பட்டபோது, அவரது அகந்தையை அடக்கித் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரமான வடிவத்துடன் ஸ்ரீ கால பைரவர் அவதரித்தார். பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்த பைரவர், பின்னர் காசி க்ஷேத்திரத்திற்கு சென்று பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்று, காசியின் காவல் தெய்வமாக (க்ஷேத்திர பாலகராக) நிலைபெற்றார்.

கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமி திதியன்று ஸ்ரீகால பைரவர் அவதரித்ததால், அந்நாள் 'கால பைரவர் ஜெயந்தி' எனக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகா கால பைரவரை ஹோமம் இயற்றி வழிபடுவது, காலத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையையும், பைரவரின் அருளால் சனி தோஷத் தாக்கங்கள் குறையவும் துணைபுரியும் என்பது புராண ஐதீகமாகும்.

Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

1

தடைகள் விலகல்

தொழில் போட்டி, மறைமுக எதிர்ப்புகள் மற்றும் வாழ்வில் நிலவும் சிக்கல்கள் தணிந்து, சுமுகமான சூழல் உருவாக இறையருள் கிட்டும்.

2

பொருளாதார முன்னேற்றம்

கடன் சுமைகளால் ஏற்படும் மன அழுத்தம் குறையவும், தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த முடக்கங்கள் நீங்கிப் புதிய வாய்ப்புகள் அமையவும் இறைவன் துணைபுரிவார்.

3

ஆன்மீகப் பாதுகாப்பு

கண் திருஷ்டி குறித்த அச்சம், காரணமற்ற பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் விலகி, மனதிற்குள் ஒரு நேர்மறையான பாதுகாப்பு உணர்வு பிறக்கும்.

4

சனி & கால தோஷ சாந்தி

சனி பகவானுக்கு குருவாக விளங்கும் கால பைரவரை வழிபடுவதால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் ராகு-கேது தோஷங்களின் தீவிரம் தணிந்து, மன அமைதியுடன் செயல்பட உதவும்.

5

குடும்ப நலம் & சுபிட்சம்

இல்லத்திற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இறையருளும், மன அமைதியும், ஐஸ்வர்யமும் நிலைத்திருக்க வழிவகுக்கும்.

பூஜை செயல்முறை

1

அனுக்ஞை & மகா கணபதி பூஜை

ஹோம வழிபாடுகள் தடையின்றி இனிதே நடைபெற முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி அனுமதி பெறுதல்.

2

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனித நீரால் சுத்திகரித்தல்.

3

ஸ்ரீ மகா கால பைரவர் சங்கல்பம்

உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் வாழ்வில் உள்ள தடைகள், கடன் நெருக்கடிகள் மற்றும் கிரக தோஷங்கள் சாந்தியடைய வேத விற்பன்னர்கள் சங்கல்பம் செய்தல்.

4

கும்ப ஆவாஹனம் & பைரவாஷ்டக ஜபம்

புனித கலசத்தில் ஸ்ரீ மகா கால பைரவரை ஆவாஹனம் செய்து, மூல மந்திரங்கள், கால பைரவாஷ்டகம் மற்றும் கவசம் ஜபித்தல்.

5

மகா கால பைரவர் ஹோமம்

ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்கச் செவ்வரளி மலர்கள், வில்வம், மிளகு, விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் பசு நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

6
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து பூர்ணாஹுதி செய்து, ஸ்ரீ மகா கால பைரவருக்கு மகா தீபாராதனை காட்டி பிரார்த்தனை செய்தல்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி சங்கல்பம் செய்து பூஜை நடத்தப்படும். ஹோமம் நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவில் விவரங்கள்

வைதீக தனியார் யாகசாலை

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Family Puja

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

ச
சத்யபாமா
மதுரை
Verified
Couple Puja

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

ப
பத்மா
தஞ்சாவூர்
Verified
Private Puja

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

க
கிருஷ்ணா
பெங்களூரு
Verified

Reviews

4.920K+
ச

சத்யபாமா

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

5.0
ப

பத்மா

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

5.0
க

கிருஷ்ணா

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

5.0
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
மகா கால பைரவர் ஹோமம் (கால பைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு)
ISO Certified 27001100% Secure PaymentCustomer Support
பூஜை நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் பூஜை வீடியோ உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும்.

You won't be charged yet

ISO Certified 27001100% Secure PaymentCustomer Support