
மகா நவகிரக பரிகார ஹோமம்
வைதீக தனியார் ஆலய யாகசாலை
சனி தோஷத் தாக்கங்கள் குறைந்து வாழ்வில் முன்னேற்றம் பெற!
10K+pujas conducted
You won't be charged yet
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் சனி தசா-புத்தி தாக்கங்களால் வாழ்வில் தடைகளை உணர்கிறீர்களா?
உங்களைச் சூழ்ந்துள்ள சனி தோஷத் தாக்கங்கள் சாந்தியடைந்து, வாழ்வில் நிலையான முன்னேற்றமும், மன அமைதியும், சுபிட்சமும் பெருக வேண்டி நடத்தப்படும் சிறப்பு வழிபாடே 'சனி வக்ர நிவர்த்தி சிறப்பு மகா ஹோமம்'.
ஜோதிட சாஸ்திரத்தில் கர்ம காரகனாகவும், நீதிமானாகவும் திகழும் ஸ்ரீ சனீஸ்வர பகவான், தனது வக்ர கதியிலிருந்து விடுபட்டு நேர்கதிக்குத் திரும்பும் முக்கிய நிகழ்வே 'சனி வக்ர நிவர்த்தி' ஆகும். சனி பகவானின் இந்தச் சஞ்சார மாற்றம், வாழ்வில் புதிய திருப்பங்களையும், நீண்ட நாள் தேக்க நிலைகள் மாறுவதற்கான நல்ல சூழலையும் உருவாக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.
நிகழும் பராபவ ஆண்டு கார்த்திகை மாதம் 26-ஆம் நாள் (11.12.2026) வெள்ளிக்கிழமை, திருதியை திதி கூடிய சுப தினத்தில், கர்ம காரகனான ஸ்ரீ சனீஸ்வர பகவான் வக்ர கதியிலிருந்து நேர்கதிக்குத் திரும்பும் சனி வக்ர நிவர்த்தி புண்ணிய நாளில், சனி பரிகாரத்திற்குப் புகழ்பெற்ற திருநள்ளாறு திருத்தலப் பகுதியில் அமைந்துள்ள வைதீக தனியார் யாகசாலையில் இந்த மகா ஹோம வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. மேலும் அன்றைய தினம் மதுரையில் உள்ள 108 சத்ய யுக சிருஷ்டி ஆலயத்தில் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
சனி வக்ர நிவர்த்தி சிறப்பு ஹோம மகிமை
சனி வக்ர நிவர்த்தி சிறப்பு ஹோமம் என்பது சனி பகவான் வக்ர கதியிலிருந்து நேர்கதிக்குத் திரும்பும்போது ஏற்படும் கிரக மாற்றங்களுக்குச் சாந்தி செய்து, அவரது நல்லருளைப் பெறுவதற்காக ஆவாஹனம் செய்து நடத்தப்படும் பாரம்பரியப் பரிகார யாகமாகும்.
ஹோம விசேஷம்: புனிதமான 'சனி மூல மந்திரங்கள்', 'சனி காயத்ரி', 'ஸ்ரீ ருத்ரம்', 'தசரத கிருத சனி ஸ்தோத்திரம்' மற்றும் 'நவகிரக சூக்தம்' முழங்க சனி பகவானுக்கு விசேஷ ஆகுதிகள் சமர்ப்பித்து ஹோமம் இயற்றப்படுகிறது.
அக்னி & தானிய மகிமை: சனி பகவானுக்கு உகந்த கருப்பு எள், வன்னி சமித்துக்கள், நவதானியங்கள், விசேஷ மூலிகைகள், நீல மலர்கள் மற்றும் தூய பசு நெய் ஹோம அக்னியில் சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களின் நலனுக்காகவும் தோஷ சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
புராண பின்னணி
புராணத்தின் படி, தர்மத்தின் வழி நின்ற நிடத நாட்டு மன்னன் நள மகாராஜா, ஏழரை சனியின் கடுமையான தாக்கத்திற்கு ஆளானான். அதன் விளைவாகத் தனது ஆட்சி, செல்வம், சுற்றம் என அனைத்தையும் இழந்து, காடுகளில் பல துயரங்களை அனுபவித்தான்.
தவ வலிமை மிக்க நாரத மகரிஷியின் அறிவுரைப்படி, நள மகாராஜா தர்ப்பை வனமாகத் திகழ்ந்த திருநள்ளாறு புண்ணிய க்ஷேத்திரத்தை அடைந்தான். அங்குள்ள புனிதமான நள தீர்த்தத்தில் நீராடி, மனமுருகி வழிபட்டான். ஈசனின் திருவருளால் நளனைப் பீடித்திருந்த சனி தோஷம் விலகியது; அவன் இழந்த ராஜ்ஜியத்தையும் குடும்பத்தையும் மீண்டும் பெற்றான்.
அப்போது சிவபெருமானின் ஆணைப்படி சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக நிலைபெற்று, "திருநள்ளாறு தலத்திற்கு வந்து ஈசனையும் தம்மையும் வழிபடும் பக்தர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனி தோஷங்களின் துன்பம் தணிந்து, நல்வாழ்வும் சுபிட்சமும் கிட்ட அருள்வேன்" என வரமளித்தார் என்பது புராண வரலாறாகும்.
அத்தகைய மகிமை வாய்ந்த திருநள்ளாறு க்ஷேத்திரப் பகுதியில், சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையும் புண்ணிய தினத்தில் சிறப்பு ஹோமம் இயற்றுவது, சனி தோஷங்களின் தாக்கத்தைத் தணித்து வாழ்வில் நிலையான முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் பெற்றுத் தரும் என்பது புராண ஐதீகமாகும்.
ஜாதகத்தில் நடைபெறும் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி மற்றும் சனி தசா-புத்தி காலங்களால் ஏற்படும் கிரகத் தாக்கங்களின் தீவிரம் தணிந்து நற்பலன்கள் கைகூட வழிவகுக்கும்.
தொழில், வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் நீடித்து வந்த தேக்க நிலை அகன்று, புதிய வாய்ப்புகளும் நிலையான வருமானமும் உருவாகத் துணைபுரியும்.
பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கடன் சுமைகளால் ஏற்படும் அழுத்தம் குறைய வழிகள் பிறக்கும்; வெள்ளிக்கிழமையுடன் கூடிவரும் நன்னாள் என்பதால் தன-தானிய சுபிட்சம் பெருக இறையருள் கிட்டும்.
சனி பகவான் நேர்கதிக்குத் திரும்பும் நாளில் வழிபாடு செய்வதால், தள்ளிப்போன சுப காரியங்களும் நன்முயற்சிகளும் இனிதே நிறைவேற இறைவன் துணைபுரிவார்.
ஹோம வழிபாடுகள் தடையின்றி இனிதே நடைபெற முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி அனுமதி பெறுதல்.
ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனித நீரால் சுத்திகரித்தல்.
உங்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் சொல்லி, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி உள்ளிட்ட சனி தோஷங்கள் சாந்தியடைந்து சுபிட்சம் கிடைக்க வேத விற்பன்னர்கள் சங்கல்பம் செய்தல்.
புனித கலசத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவானை ஆவாஹனம் செய்து, சனி மூல மந்திரங்கள், காயத்ரி மற்றும் தசரத சனி ஸ்தோத்திரம் ஜபித்தல்.
ஹோம அக்னியில் கருப்பு எள், வன்னி சமித்துக்கள், நவதானியங்கள், விசேஷ மூலிகைகள் மற்றும் தூய பசு நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.
ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்துப் பூர்ணாஹுதி செய்து, மகா தீபாராதனை காட்டிப் பிரார்த்தனை செய்தல்.
பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.
எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.
வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.