
விஸ்வரூப விஷ்ணு மாயா மகா ஹோமம்
இராம்ஜி சுவாமிகளின் ஸ்ரீமடம், விஷ்ணுமாயா சமஸ்தானம்
சிவன் அருளால் நலன் பெற!
10K+pujas conducted
You won't be charged yet
எம்பெருமான் சிவபெருமான் ஆடல்வல்லானாக ஆனந்தத் தாண்டவம் ஆடிய புண்ணிய தினமாகப் போற்றப்படுவது 'ஆருத்ரா தரிசனம்' (திருவாதிரை) ஆகும். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரமும், ஞானத்திற்கும் நலத்திற்கும் அதிபதியான குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையும் ஒன்றிணையும் புண்ணிய காலமே இந்த நன்னாள்.
பராபவ ஆண்டு மார்கழி மாதம் 9-ஆம் நாள் (24.12.2026) வியாழக்கிழமை சிதம்பரத்தில் உள்ள வைதீக தனியார் யாகசாலையில் நிகழவிருக்கும் இந்த ஆருத்ரா தரிசன நன்னாளில், மன பயங்களை நீக்கி, ஆன்ம பலத்தையும், நீண்ட ஆயுள் மற்றும் நலத்திற்கான இறையருளையும் வேண்டி நடத்தப்படும் சிறப்பு வழிபாடே இந்த 'சிவ ஆருத்ரா மகா மிருத்யுஞ்சய ஹோமம்'.
சிவ ஆருத்ரா மகா மிருத்யுஞ்சய ஹோம மகிமை
மகா மிருத்யுஞ்சய ஹோமம் என்பது மன பயங்களை நீக்கி, ஆன்ம பலத்தையும், நலமான வாழ்விற்கான நல்லருளையும் வழங்கும் சிவபெருமானின் மகா மிருத்யுஞ்சய ஆற்றலை ஆவாஹனம் செய்து நடத்தப்படும் பாரம்பரியப் பரிகார யாகமாகும்.
ஹோம விசேஷம்: புனிதமான 'மகா மிருத்யுஞ்சய மூல மந்திரம்', 'ஸ்ரீ ருத்ரம்', 'சமகம்', 'மிருத்யுஞ்சய கவசம்' மற்றும் 'நடராஜ பத்து' முழங்க எம்பெருமானுக்கு விசேஷ ஆகுதிகள் சமர்ப்பித்து ஹோமம் இயற்றப்படுகிறது.
அக்னி & தானிய மகிமை: விஷேச ஹோம பொருட்கள், தானியங்கள் மற்றும் தூய பசு நெய் ஹோம அக்னியில் சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களின் நலனுக்காகவும் தோஷ சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
ஹோமத்தின் புராண பின்னனி
புராணங்களின் படி, பதினாறு வயதே ஆயுள் கொண்ட மார்க்கண்டேய முனிவர், எமதர்ம ராஜனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகச் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டு புனிதமான 'மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை' உச்சரித்தார். பக்தனின் ஆழ்ந்த பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதுடன் கூடிய சிரஞ்சீவிப் பட்டத்தை அருளினார். மேலும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களின் தவத்திற்கு இரங்கிய ஈசன், மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திரத் திருநாளான 'ஆருத்ரா தரிசனம்' அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடித் தரிசனம் தந்தருளினார்.
ஆருத்ரா தரிசனப் புண்ணிய தினத்தில் இயற்றப்படும் இந்தத் தெய்வீக ஹோமம் மற்றும் வழிபாடு, மன பயங்கள் மற்றும் கவலைகளை விலக்கவும், ஜாதகத்தில் உள்ள ஆயுள் தோஷத் தாக்கங்கள், அஷ்டம சனி மற்றும் கிரக தோஷங்கள் சாந்தியடையவும், குடும்பத்தில் நலமும் மங்களமும் பெருகவும் இறையருளைப் பெற்றுத் தரும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.
ஜாதகத்தில் உள்ள ஆயுள் தோஷத் தாக்கங்கள் மற்றும் கிரகக் குறைபாடுகளின் தீவிரம் தணிந்து, நீண்ட ஆயுளும் நலமும் பெற இறைவன் துணைபுரிவார்.
வியாழக்கிழமையுடன் கூடிவரும் ஆருத்ரா தரிசன நன்னாள் என்பதால் குரு, சனி மற்றும் ராகு-கேது கிரகங்களால் ஏற்படும் தோஷத் தாக்கங்கள் தணிந்து நற்பலன்கள் விளையும்.
காரணமற்ற பயம், மன அழுத்தம் மற்றும் குடும்பப் போராட்டங்கள் நீங்கி, இல்லத்தில் அமைதியும் சுபிட்சமும் நிலைத்திருக்க துணைபுரியும்.
உடல் மற்றும் மன சவால்களால் ஏற்படும் கவலைகள் தணிந்து, மன வலிமையுடனும் ஆன்ம பலத்துடனும் வாழ இறையருள் கிட்டும்.
ஹோம வழிபாடுகள் தடையின்றி இனிதே நடைபெற முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி அனுமதி பெறுதல்.
ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.
உங்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் சொல்லி, உங்களின் வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் கிரக தோஷங்கள் சாந்தியடைந்து நீண்ட ஆயுளும் நலமும் கிடைக்க வேத விற்பன்னர்கள் சங்கல்பம் செய்தல்.
புனித கலசத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானையும் மகா மிருத்யுஞ்சய மூர்த்தியையும் ஆவாஹனம் செய்து, புனிதமான மகா மிருத்யுஞ்சய மந்திரம் மற்றும் ஸ்ரீ ருத்ரம் ஜபித்தல்.
ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க வில்வ தளங்கள், அருகம்புல், அமிர்தவல்லி மூலிகை, நவதானியங்கள் மற்றும் தூய பசு நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.
ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்துப் பூர்ணாஹுதி செய்து, எம்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டிப் பிரார்த்தனை செய்தல்.
பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.
எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.
வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.